சார் ஒரு டவுட்டு + பன்ச் டயலாக்

தீயணைக்கிற வண்டிக்குள்ள தண்ணிதானே இருக்கு, அப்புறம் ஏன் வெளிய தீ ன்னு எழுதி வச்சிருக்காங்க ?

உலகத்துல 3 பங்கு கடல் 1 பங்கு நிலம் இருக்கிறதா சொல்றாங்க. தண்ணிக்கு கீழேயும் நிலம் தானே இருக்கு. அப்டின்னா 4 பங்கும் நிலம் தானே?

ஆசைதான் துன்பத்துக்கெல்லாம் காரணம்னா துன்பம் வராம இருக்கணும்னு நினைக்கிறதே ஒரு ஆசை தானே?

முத்தம் கேட்டால் கூட சிறிதும் யோசிக்காமல் கொடுத்து விடுகிறார்கள். கொஞ்சம் முறுக்கு கேட்டால் நிதானமாக யோசித்தபின் தருகிறார்கள் குழந்தைகள்.

எனக்கு அறிவுரை சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். என் எந்தத் தவறும் எனக்குத் தெரியாமல் செய்யப்பட்டதல்ல.

நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே.
ஒரு உயிருக்கு இன்னொரு உயிரை உணவாகப் படைத்த கடவுளிடமிருந்து என்ன விதமான கருணையை எதிர் பார்க்கிறீர்கள்?

கடைசியில் இது சரியாகும் என்று நம்புங்கள். சரியாகாவிட்டால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்.

ஆசையை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்கத் தேவையில்லை. நடுத்தர குடும்பத்தில் ஆணாக பிறத்தலே போதுமானதாகிறது.

சீதையின் தீக்குளிப்பில் நிரூபிக்கப்பட்டது இராவணனின் கற்பு.

வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன.

வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.

ஒரு நாளைக்கு ஐந்து டிரெஸ் மாற்ற வேண்டுமானால் பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, கைக்குழந்தையாக இருந்தாலே போதும்.

உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.

ஏமாற்றங்கள் பழகிவிட்டன. இந்த முறை அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்ற ஆவல் தான் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது.

உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம்.

நெருக்கமானவர்களிடம் நாம் நம்பி சொன்ன வார்த்தைகளை மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் அவமானப் படுகிறது நம் நம்பிக்கை.

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்.
தன்னை ஒரு புகைப்படம் எடுக்கக் கூட உறவோ நட்போ இல்லாத தனிமை சூழ்ந்த அந்த கையறு நிலையையே ஆங்கிலேயர்கள் Selfie என்று அழைத்தனர்.

மாமியார் மருமகள் சண்டையில் மனைவி பக்கமும் இல்லாம அம்மா பக்கமும் இல்லாம பீரோ பக்கத்துல நிற்பவனே சிறந்த குடும்பஸ்தன்.

தவறு செய்யும் மனிதர்களைப் பார்த்து தவறாக பேசாதீர்கள். உங்கள் வாழ்க்கை இன்னும் முடிந்து விடவில்லை.

திருமண மேடையில் மணமகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வார்னிங் "பொண்ணை கூப்பிடுங்கோ நல்ல நேரம் முடியப் போகுது"

மனைவியை நேசித்தால் மாரடைப்பில் இருந்து 50% தப்பலாம் - ஆய்வில் தகவல் .ஆனா அது உங்க சொந்த மனைவியாக இருக்கணும் .

அனேக உண்மைகள் வேடிக்கைப் பேச்சிலேயே வெளியாகி விடுகின்றன.
பாக்கெட்டில் மீதம் இருந்த கடைசி நூறு ரூபாயும் காலியான பிறகு தான் வாழ்க்கை மீதான பயம் இன்னும் அதிகரிக்கிறது.

உண்மையில் யார் இல்லாமலும் வாழ்ந்து விட முடியும் . அதை பரஸ்பம் உணராமல் பார்த்துக் கொள்வதைத்தான் தாம்பத்யம் என்கிறோம்.

எழுதியவர் : செல்வமணி (21-Apr-16, 11:35 pm)
பார்வை : 242

மேலே