காதலுக்காக அந்தகாரந்திலிருந்து ஒரு குரல்
"வழி மாறி வந்திட்டீங்களா...
இங்கெல்லாம் வரக்கூடாதுன்னு
தெரியாதா....?"-
கணீர் குரல்,
அந்த பொதுமக்கள் நால்வரை
சட்டென
நிற்க வைத்தது...
சத்தம் வந்த திசையிலிருந்த
ஒற்றைப் பனை
ஈ.... என்பது போல் தலை
விரிந்து
பார்த்துக் கொண்டிருந்தது...
"தப்புதான் மன்னிச்சிடு"
என்றபடியே வந்தவழியே
திரும்பி போனார்கள்,
வந்தவர்கள்...
இப்படி ஊருக்கு ஒதுக்குபுறமான
அந்த ஒற்றைப் பனைமரத்தின்
பின்னிருந்து வரும் அந்தக்
குரலை ஊர் மக்களில் பலர்
கேட்டிருக்கிறார்கள்......
கேட்டதோடு அதற்கு
மேல் முன்னேறாமல் பயந்து
திரும்பியிருக்கிறார்கள்...
ஒவ்வொரு முறையும் 'அப்பாடா
தப்பித்தோம்' என்றபடியே
பனைமரத்துக்கு பின் இருந்த
மறைவுக்குள் மறைந்து
மறைந்து காதல் செய்தவர்கள்
இப்போதுவரை அந்தக் குரல்
யாருடையது என்று தெரிந்தும்
கூறியதில்லை.....
காதலில் சேர்த்த போதும் சரி...
பிரிந்த போதும் சரி...யாரிடமும்
கூறியதேல்லை.....
கவிஜி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
