வெண்டுறை 57
குறட்டாழிசை ..
சிக்கல் வரும்நேரம் சிந்தித் திருப்பார்க்கு
சிக்குமோ வெண்டுறை
வெண்டுறை ..
இருகால் அகற்றி குதிகால் பதித்து
இருக்கை அமர்ந்து மலவாய் திறக்க
வருவாய்நீ யென்று பொறுமைநான் காத்தும்
இருக்கும் இடத்தை விடுத்து வெளியே
வரமறுத்து நின்றாய் பிடித்திழுத்த மூச்சு
விடுத்த பொழுது கடுப்பில் நீவெளிவரும்
முன்னே வியர்த்தது மேனி