நீர்க் குமுறல்
![](https://eluthu.com/images/loading.gif)
சூல் கொண்ட மேகங்கள்
சுமை கொண்டு முட்ட
கூர் கொண்ட உச்சி மலை
யாவும் தனதென எண்ண
நீர் நிற்க இடமின்றி வழுக்கும்
நீரோட்டம் கண்டு எனதே எனதே
எனும் மலையின் ஓவெனும்
பேரிரைச்சல் ஓலம் புலம்பல் கேட்டே
தப்பிச் செல்வோம் இது எம்
இடமல்ல எனச் செல்வோம்...
வழி நெடுகத் தாவரக் கூட்டம்
வரிசையில் காத்திருக்கும்
அவை தாங்கும் உயிரினங்களும்
சற்றே இளைப்பாரும் நாம்
செல்லும் வழி பார்த்திருக்கும்......
ஒரு மோனத் தவமிருந்தே
நிற்பதற்கு இடம் உண்டெனினும்
சென்று சேர்வதற்கும் இடமுண்டே
பற்றிய பிணை தளர்ந்ததால்
மேகத் திருடன் கடத்தினான்
வழி அறியா வழி தேடிடும்
ஆழி அடையும் விடா முயற்சியில்
இது எவரிடம் என்றே அறியோம்
எமை உரிமை கொள்கின்றார்
வழி மீறிச் செல்லாமல்
அணை போட்டுத் தடுக்கிறார்கள்
பள்ளத் தூரானுக்கு போகவிடாது
வெள்ளப் பதுக்கல் வெகு வினோதம்
நாம் ஆவியாகவும் மறையும் ஞானி
அறியாப் பதர்கள் உணருமா இனி
வெண்டுமே எமை என்றாலும் பல
வேண்டாதன வீண் கலப்பு
சுத்தமே சுபீட்சமே தருமெம்மை
சுகாதார்க் கேட்டாகும் செயல்கள்
சுத்தமாய்ப் பிடிக்கவில்லை
தொலைவில் இருக்கிறாள் எம் கடலம்மா
விட்டுப் பிரிந்த எம்மை
குப்பைகள் குவிந்த எம்மை
மாசுக் கழிவில் நிறம் மாறிய எம்மை
வேண்டாம் எனத் தள்ள மாட்டாள்....
ஐய்யோ எம்முள் சேர்த்த மாசு
எம்மையே நம்பியுள்ள
நீர் வாழ் உயிரினங்களுக்கு்
தீங்காமே என் செய்வோம்....
எப்படியாவது போய்ச் சேரவேண்டும்
இங்கு மாந்தர் இழி நிலை கூறவேண்டும்
இங்கு இவர்க்கு யாம் மதிப்பில்லை
நம்மை விரும்பும் தாவரக் காட்டையும்
அழித்தே தரை மட்டமாக்கி விட்டனர்...
இங்கு செல்வதில் யாதும் பயனில
இனி சிறுகச் சிறுக சேர்த்து
பொங்கி ஒரு நாள் சென்று
மூழ்கடித்தே அழித்திடல் வேண்டும்....
---- முரளி