சொப்பனக் காட்டில் இறகாகும் பித்து நிலை சப்தங்கள்

சொப்பனக் காட்டில் இறகாகும் பித்து நிலை சப்தங்கள்

காகம் கரைகிறது
உறவினர் வருவாரா தெரியாது
சோறிட நீ வருவாய்...
------------------------------------------------

கொடி
கட்டிலாகிறது
துணிகளில் தூங்குகிறாய்...
--------------------------------------------------

நீ விளையாடிய
நொண்டியில் மட்டும்
மார்புகளே குதிக்கின்றன...
----------------------------------------------------------

நல்லவேளை நான் புத்தனாகவில்லை
தவம் கலைத்த
பழி உன்னை சேர்ந்திருக்கும்...
-------------------------------------------------------------------

உன் தவத்தைக் கலைத்து விடுகிறது
ச்சே என்ன வரம்
என் வரம்..
---------------------------------------------------------------------

உன் நடை பயிற்சியில் ஆரம்பித்து
உன் நடை பயிற்சியிலேயே
முடிந்து விடுகிறது சூரியன்...
---------------------------------------------------

சீக்கிரம் கதவைத் திற
விடியட்டும்
அதிகாலை....
----------------------------------------------------

அம்மா போய்ட்டு வர்றேன்
என்று இரண்டாவது முறை சொல்கையில்
உறுதியாகிறது நம் காதல்...
---------------------------------------------------------

பிச்சை வழிகிறது
இன்னும் இடு இச்சை
கச்சை எதற்கு இனி...
-----------------------------------------------------------

வெற்றிடம் இறுக்கம்
தளர்கிறது...
தத்தித் தாவுகிறது முத்தம் ...
--------------------------------------------------------

கவிஜி

எழுதியவர் : கவிஜி (23-Apr-16, 6:05 pm)
பார்வை : 82

மேலே