என்றைக்கு என்பேன் ! என்றாவது அன்பே !

மன்னித்துவிடு.............
காதலி என்னை காதலி
இவ்வாறு கூறி வந்தவன் நான்தான்
உன் பின்னால் வந்தவனும் நான் தான்
உன்னை பின்னால் வர வைத்தவனும் நான்தான்
மன்னித்து விடு .....
மறந்துவிடு ..........
முதலில் காதலை சொன்னவனும் நான்தான்
காதலிக்காமல் சென்ற உன்னை காதலிக்க வைத்தவனும் நான் தான்
மன்னித்து விடு .....
மறந்துவிடு ..........
கணவனை இழந்த என் தாய்
கனவுகளோடு சுற்றும் தம்பி
என்றாவது தன்னை நல்ல இடத்தில மனம் முடிதுவைப்பான் தம்பி
என காத்திருக்கும் என் அக்கா
கிழிந்த பாயில் படுத்துக்கொண்டு
கருப்பு வெள்ளை டிவி யில் கலர் படம்
காண கனாக்காணும் என் தங்கை
ஒழுகும் வீட்டை
அண்ணார்ந்து பார்ர்க்கும் என் பாட்டி
இச்சூழ்நிலையில் இருக்கும்
என்னை
மன்னித்து விடு .....
மறந்துவிடு ..........
உன்னோடு நான் வந்தால்
இவர்களை பார்க்க யார் வருவார்
மன்னித்து விடு .....
மறந்துவிடு ..........
என்றாவது முன்னுக்கு வருவேன்
என்று போராடும் என்னை
மன்னித்து விடு .....
மறந்துவிடு ..........
காலத்தை வெல்ல
என்னை மன்னித்து விடு .....
மறந்துவிடு ..........
என்றும் நீங்க அன்போடு
காதலன்............

எழுதியவர் : முரளிதரன்.B (19-Jun-11, 2:44 pm)
பார்வை : 391

மேலே