புரியாத புதிர் நீ

சில நேரம் காந்தமாய்
இழுக்கிறாய்
சில நேரம் கந்தகமாய்
உமிழ்கிறாய்

சில நேரம் சூரியகாந்தியாய்
மலர்கிறாய்
சில நேரம் காந்தலாய்
கருக்குகிறாய்

சில நேரம் கந்தமாய்
மணக்கிறாய்
சில நேரம் கந்தலாய்
கசக்குகிறாய்

புரியாத புதிராய் போகின்றாய்
விளங்காத பதிராய் நிற்கின்றாய்

உயிர்காக்கும் கதிராகி உதிப்பாயோ?
உயிர்வளிக்கு எதிராகி மறுப்பாயோ?

எழுதியவர் : சுபாசுந்தர் (25-Apr-16, 4:46 pm)
பார்வை : 1004

மேலே