பேசும் மெளனம்

வழி மேல் விழி வைத்து வீதியிலே நான் நிற்க !
வெண்ணிலவும் வாராதோ வசந்தமும் வீசாதோ !
காத்திருக்கும் அந்த நிமிடம் -
கற்பனையும் ஊறுதடி !

தேராய் பவனி வர ;
தெருவெல்லாம் திருவிழாதான் !
வாய்திறந்து பேசவில்லை உன் -
மௌனம் என்னை வாட்டுதடி !

உள்மனதில் ஓடும் ரயில் ;
ஓசையும் கேட்க்கிறதா ?
தடம் புரண்ட என் இதயம் -
உன் மௌனத்தில் கலைகிறதா ?

பேசாத உன் மௌனம், துயரத்தை கூட்டுதடி !
துக்கத்திலே நான் இருக்க, தூக்கம் கூட ஓடுதடி !
துயரம்போக்க வாராயோ, மௌனம் களைந்து பேசாயோ !

எழுதியவர் : haja mohinudeen (25-Apr-16, 2:49 pm)
பார்வை : 238

மேலே