ஒரு வெள்ளந்தி மடம்

அவன் ரத்தத்துக்குள்ளே
யாரோ ஓடி ஒளிகிறார்கள்
அவனை சிந்திக்க விடாமல் .

ஆறென்று எழுத நினைத்து
ஐந்தை எழுதி
அமைதி கொள்கிறான் .
காற்றில் காகிதங்களாடி
கலகலவென்று சிரித்து பறக்கின்றன .

இந்த ராசபாட்டைக்கு
இருட்டு குழிக்குள்
விழுந்து தெறித்த
வீரியத் திரவத்தின்
கால பொழுதுகளை கணக்கிட முடியாத
அமானுஷ்யமான ஒன்றில்
அவன் இருந்தான் அப்போது.

அவனுள் வைரமும்
அவனுள் தங்கமும்
எங்கேயென்று இன்னும் தேடுகிறான்
சிலந்தி வலைப் பின்னல்களில்
சிக்கலுற்ற அவன் பொழுதுகள்
சில நேரங்களில் புள்ளியாகவும்
சில நேரங்களில் பூமி போலவும்
பொய் முகங்கள் காட்டுகின்றன .

அவனிப்போது தட்டும் வீட்டில்
யாரிருப்பார் அவனறியான்
நிச்சயமாய் நீஇருக்கக் கூடாது.

நீதானே கவிதைக் காட்டில் அவனை
அநாதை ஆக்கிவிட்டுப் போனவன்.
நீதானே நந்தவனத் தெருவில் அவனை
நிற்கச் சொல்லி முட்கள் பரப்பியவன்.

எழுதியவர் : சுசீந்திரன். (26-Apr-16, 10:46 am)
பார்வை : 74

மேலே