பிம்பம் கட்டமைக்கப்படுகிறது
உன் ரகசியங்களுக்குள்
என் ரகசியமும்
சேர்ந்தே மறைந்திருக்கின்றன.
உன் ரகசியம் உனக்குள்ளும்
என் ரகசியம் எனக்குள்ளும்
புதைந்தே இருக்கின்றன.
நாம்
ரகசியம் காப்பற்றி விட்டோம்
என்று நினைக்கும் வேளையில்
நம்
ரகசியத்தை தெரிந்தே
ரகசியம் காபற்றியவர்களும் உண்டு.
நாம்
ரகசியமாய் தான்
இருக்க வேண்டும்
என்று நினைப்பதை
பகிரங்கமாய்
வாழ்வோரும் உண்டு.
எத்தனையோ ரகசியங்கள்
அவர்களோடு
மண்ணில் புதைந்ததுண்டு.
ரகசியம் காப்பது
நம்மை ,நம்பிம்பத்தைக்
காப்பாற்றும் முயற்சி தானே.
ஒன்று தெரியுமா?
எத்தனையோ பேரின்
தனித்திறமைகளும்
ரகசியமாய்
புதைந்திருக்கின்றன!