நினைத்தபடி

இரு விழி சந்திப்பில்
ஒரு நிமிடம் மறந்தேன்!
இருபது வருடத் தேடலா?
ஒவ் வொன்றாய் யோசித்தேன் !

சரியான வாழ்க்கைக்கு
துணையானவள் இவள்தானோ!
துணைதேடும் வாழ்க்கைக்கு
சரியானவள் இவள்தானோ!!

நான் கண்ணிரோடு நின்றால்
கட்டிதான் அணைப்பாளா?
நான் சிரித்தபடி நின்றால்
கேள்வியின்றி சிரிப்பாளா?

காதல் செய்யும் வேளையில்
கொஞ்சி அவள் இருக்கவேண்டும்!
கலவி செய்யும் நேரத்தில்
கலகலப்பாய் அவள் இருக்கவேண்டும்!

தொலைத்தூர பயணமாய்
வாழ்வுகள் போகலாம்!
துளியளவும் நகராமல்
வாழ்க்கையில் இருக்கவேண்டும்!

ஏற்றங்கள் தாழ்வுகள்
ஏராளாமாய் வரலாம்!
நம்பிக்கையில் அவள்
என்னோடு இருக்கவேண்டும்!

காலங்கள் கடந்து
கண்மூடும் வேளையிலவள்
கைபிடித்திருந்தாலே போதும்
அக்காதலே இன்றேவேண்டும்!!

எழுதியவர் : (27-Apr-16, 11:37 am)
Tanglish : ninaiththapadi
பார்வை : 85

மேலே