12 பிவி பாகம்-4

அடுத்த நாள் காலை சுமித்ரா மிஸ்ஸின் குரல் கேட்டு விழித்தெழுந்தாள் பிவி. இட்ஸ் டைம் டு கெட் அப், கமான் கெட் அப்”
அனைவரும் எழுந்து காலை கடன்களை முடித்து அவசரமாக குளித்துவிட்டு கிளம்பினர். டிபன் பூரியும் சென்னாவும் குடுத்தார்கள் அதை சாப்பிடுகையில் ரவி சார் பேசினார், "சில்ட்ரன் டுடே வி ஆர் கோயன் போர் ராப்டிங். பக்கத்தில் இருக்கற ஏரிக்கு போறோம். ஆப்டர் ராப்டிங் வி வில் கம் அண்ட் பாக் அவர் திங்க்ஸ் அண்ட் லீவ் டு டில்லி. டுமாரோ வி வில் கேட்ச் அவர் ட்ரைன்". அவர் பேசிக்கொண்டே இருக்கையில் பிள்ளைகளின் நடுவே ஒரு முனுமுனுப்பு. மெல்லியதாய் எலோரும் ஏதோ சொல்ல எல்லோரும் வேதாவை பார்க்க, பிவியை கேள் கேள் என்பது போல் செய்கை செய்தாள் வேதா. தன் கையை உயர்த்தினாள் பிவி. "எஸ் பிரியா வாடிசிட்" என்றார் சுமித்ரா மிஸ்." ஷாப்பிங் எப்போ போறோம் மிஸ்" என்றாள் அழுத்தமாக. எல்லோரின் கண்களும் சுமித்ரா மிஸ்ஸைபார்க்க அவரோ புன்முறுவலோடு ரவி சாரை பார்த்தார்.
"ஓ, ஷாப்பிங், டுமாரோ ஷாப்பிங் அட் டில்லி. அவர் ட்ரைன் இஸ் இன் தே நைட். யு கேன் புட் தே லக்கஜ் இன் கிளோக்ரூம் அண்ட் கோ போர் ஷாப்பிங். ஆல் அப் யு ஹாப்பி? "என்றார். எல்லோரும் கைதட்டி கூச்சலிட்டனர். சுமித்ரா மிஸ்ஸும் கூட சிரித்து விட்டார்.

பக்கத்திலிருந்த ஏரிக்கு நடந்தே சென்றனர்... எரி பெரியதானாலும் ஆழம் குறைந்தது என்று ரவி சர் சொன்னார். பிள்ளைகளுக்கு முன் பின் ராப்டிங் அனுபவம் இல்லாததால் இந்த ஏரியில் ராப்டிங் செய்யலாம் என்று ஜிப்பா அங்கிள் சொன்னாராம்
மூங்கிலினால் ஆனா 2 கட்டுமரங்கள் அதன் துடுப்புடன் அங்கு இருந்தன. ஜிப்பா அங்கிள் வாயில் பீடாவுடன் நின்றிருந்தார். எப்போதும் போல் சத்தமாய் சிரித்துக்கொண்டே ஏதோ ஹிந்தியில் பேசினார். கையை ஏரியின் அடுத்தக்கரையைக் காட்டி நீண்ட வாக்கியமாய் ஏதோ விவரித்தார். பிவியும் மற்றவரும் ஒன்றும் புரியாமல் மொழிபெயர்ப்புக்காக ரவி சாரையே பார்த்து நின்றனர்.

ரவி சார் ராப்டிங்கை விவரித்தார்." ராப்டிங் இஸ் ஈசி. யு ஹவ் டு ஸ்டான்ட் அண்ட் ரோ தே ஒஅர். கீப் உவர் லேக்ஸ் அபார்ட். பீ ஜெண்டல். லெட்ஸ் ஸ்டார்ட் வித் சைமன். சைமன் நீ அங்கிளோடு அந்த கரைக்கு போய் வெயிட் பண்ணு... இங்கிருந்து வி வில் சென்டு வேதா, அவள் அங்கு வந்த பின் நீ திரும்பி இங்கே வந்துவிடு. நேகஸ்ட் பெர்சன் வில் கோ அண்ட் வேதா வில் கம் பாக். ஆர் யு ஆல் கிளியர்?" என்றார். ராப்டிங் தொடங்கியது. வேதா கட்டுமரம் ஏறியவுடனேயே தண்ணீருக்குள் தொப்பென்று விழுந்துவிட்டாள். ரவி சார் மறுபடியும் அவளை படகில் ஏற்றி துடுப்பு போட சொல்லிக்குடுத்தார். ஒவ்வொருவராக சென்று வந்தனர். பார்க்க லெகுவாக இருந்தாலும் எல்லோரும் சிரமப்பட்டார்கள். பலரும் விழுந்து எழுந்தே வந்து சேர்ந்தனர்.

கடைசியாக பிவியின் முறை வந்தது. கட்டுமரம் ஏறியவுடனேயே ஒரு பூரிப்பு அவள் மனதில். துடுப்பை கையில் பிடித்தவுடனே தனக்குள் ஒரு வேகத்தை உணர்ந்தாள் அவள். லாவகமாக துடுப்பை செலுத்தினாள். எங்கிருந்தோ திடீரென வேகமாக காற்று வீசியது படகு தள்ளாடியது திசை கொஞ்சம் மாறிப் போனது. மறு கரையில் நின்றிருந்த ஜிப்பா அங்கிள் கரையோரமாக ஓடத் துவங்கினார்....கரையில் நின்றவர்கள் கண் சிமிட்டாது பிவியையே பார்த்து பயத்தால் உறைந்தனர். ஆனால் பிவி கொஞ்சமும் அசராது துடுப்பை செலுத்தியபடியே இருந்தாள். திசை மாற்ற துடுப்பை அடுத்த பக்கத்தில் போட ஆரம்பித்தாள். ஆச்சர்யமாய் ஒரு அனுபவம் மிக்கவர் போல் செயல்பட்டாள். துடுப்பை பக்கம் மாற்றி மாற்றி போட்டு கட்டுமரத்தை நிலைப்படுத்தினாள். காற்றின் வலுவும் குறைய அவள் படகை வெகு அழகாக செலுத்தி... ஜிப்பா அங்கிள் முன்னம் இருந்த இடத்திற்கே வந்து அடைந்தாள். முன்னோக்கி ஓடிய ஜிப்பா அங்கிள் இப்போது மீண்டும் தன் இடத்திற்கு ஓடி வந்தார். ஹிந்தியில் அவர் பேசிக்கொண்டே கை சைகை செய்து கொண்டே இருந்தார். எதுவும் புரியவில்லை பிவிக்கு. ஒரு வார்த்தை புரிந்தது.... கில்லாடி கில்லாடி என்றது மட்டும். கட்டுமரத்தை கைப்பற்றிய அங்கிள் பிவியின் கைகளை பற்றிகொண்டு காலால் படகை நிறுத்தியவாறே பலே பலே என்றார்.

மறுமுனையில் நண்பர்கள் யாவரும் ரவி சார் சுமித்ரா மிஸ் உள்பட கைதட்டி ஆரவாரித்தனர்.அங்கே தன் முறைக்காக காத்திருந்த வினோத் பயத்தால் வெளிறிப் போனான். அவன் தனியே திரும்ப போக பயந்தான். ரவி சார் மற்றொரு படகில் அங்கு வந்து சேர்ந்தார். வினோத் அவரோடு ஏறிக்கொள்ள பிவி ஜிப்பா அங்கிளோடு படகில் ஏறிக்கொண்டாள். மறுமுனை நோக்கி பயணித்தனர் அனைவரும்.

ரவி சார் முன்னே செல்ல பிவியும் ஜிப்பா அங்கிளும் அவர்களை பின் தொடர்ந்தனர். பாதி வழியில் செல்லுகையில் ஜிப்பா அங்கிள் வேண்டுமென்றே படகை ஆடச்செய்தார். நின்றிருந்த பிவி ஒரு கணம் இதை எதிர்பாராது தள்ளாடி பின் சமாளித்து கொண்டு நின்றாள். அவளை பார்த்து ஜிப்பா அங்கிள் நக்கலாய் சிரித்துக் கொண்டே கில்லாடி கில்லாடி என்று சத்தமாக சிரித்தார்.

கரையை அடைந்ததும் ஒரே கூச்சல் கைதட்டல் ஒரு வீராங்கனையை வரவேற்பது போல் எல்லோரும் எக்காளித்து மகிழ்ச்சியாய் பிவியை வரவேற்று உற்சாகப் படுத்தினர்.

ஜிப்பா அங்கிள் “நாம் நாம்” என்று பிவியை கேட்டார். ரவி சார் “உன் பேரை கேக்குறார்” என்று சொல்லி விட்டு “பிரியா ... பிவி புலாத்தே” என்றார். அதைக்கேட்டதும் மேலும் சத்தமாய் சிரித்தார் ஜிப்பா அங்கிள். “பிவி.... பத்னி” என்றும் இன்னும் வேகமாய் சிரித்தார். ரவி சாரும் உடன் சிரித்தார். பிவியிடம் “அவர்கள் பாஷையில் பிவி என்றாள் மனைவி” என்று பொருள் என்று சொல்லிவிட்டு அவரும் மிஸ்ஸும் கூட சிரித்தனர். பிவி முதன்முறையாக அந்த அங்கிளை கோவமாய் பார்த்தாள். முகத்தை திருப்பிக்கொண்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்.

நிர்ணயித்த படியே எல்லோரும் சாப்பிட்டுவிட்டு தங்கள் துணிமணிகளையும் மற்றவைகளையும் எடுத்து வைத்து தங்கள் பைகளை தயார் நிலையில் வைத்தனர்.
ஜிப்பா அங்கிள் மேலும் மேலும் பிவியை பத்னிபத்னி என்று சீண்டிக்கொண்டே இருந்தார். மாலையில் முதல் நாள் வந்த வேன் வந்தது. ரவி சாரும் மிஸ்ஸும் ஜிப்ப அங்கிளுக்கு நன்றி கூறி கிளம்பினர். ஒவொருவராக வேனில் ஏறினர். ஜிப்பா அங்கிள் பிவியின் கையை பிடித்துக்கொண்டு ரவி சாரிடம் சென்று ஏதோ சொன்னார். பிவி நீ அங்கிளோடு ஜீப்பில் வா... எல்லோரும் பஸ் நிலையம் தானே போகிறோம் என்றார் ரவி சார்.

ம்ம் என்றவள் அவரோடு ஜிப்பில் ஏறச் சென்றாள். இத்தனைக்குள் ஜிப்பா அங்கிள் சடி சடி கஹான் என்றார். புரியாதவளாய் பிவி விழித்தாள். பின் தடி என்பது போல் சைகை காட்டி சடி என்றார் கஹான் என்றார். நினைவுக்கு வந்தவளாய்... தன் பெயர் எழுதி தன்னுடன் வைத்திருந்த குச்சியை கேட்கிறார் என்பது புரிந்துக்கொண்டு தங்கியிருந்த வீட்டிற்க்குள் ஓடிப்போனாள்.

அவள் குச்சியை தேடிக்க் கொண்டிருக்கையிலேயே வாசலில் கதவு தாளிடப் படுவதுபோல் சத்தம் கேட்டது. குச்சி கைப்பட்டது எடுத்துக் கொண்டு வாயிலுக்கு ஓடி வந்தாள். வாசல் மூடப்பட்டிருந்தது. கதவை திறக்க முயன்றாள். வெளிப்பக்கமாய் பூட்டப் பட்டிருந்தது கதவு. அங்கிள்! என்று கதவை உலுக்கிப் பார்த்தாள். ரவி சார்! மிஸ்! என்று கூச்சலிட்டாள். ஓடிக் சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். வேன் முன்னும் அதன் பின் ஜீப்பும் அந்த சாலையை தாண்டி போய்க் கொண்டிருந்தது.
தொடரும்...

எழுதியவர் : சுபா சுந்தர் (28-Apr-16, 3:08 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
பார்வை : 161

மேலே