நீரின்றி அமையாது உலகு
கருமேகங் கூடி
உருமாறி மழையென
பெய்தும் -நான்
அடையேனே
கொடுங்குழி தோண்டி
கோடையிலும் நீரெடுத்து
நிறைத்தாலும் -அடையேனே
நீரென நீ எதைக்கொண்டு
சேர்த்தாலும் நிறையளவாய்
ஏதும்நான் அடையேனே
நிலம்கண்டு நீ
குனிந்து குழைத்த சேற்றிலுன்
நெற்றிவியர்வைத் துளி
ஒன்றினைப் பெற்றபின்னே
நானும் உழவுக்கு தாயாகின்றேன் -உன்
வியர்வை நீரின்றி அமையாது உலகு