உழவு
அகழ்வாரைத் தாங்கும்நிலமென -எனையும்
புகழ்ந்தாரே யோர்நாள்
கால்மிதித்து விதைவிதைத்து
நீரிட்டு நிலம்பரப்பி
உரமிட்டு களைதிருத்தி -எனை
கருவுறச்செய்தாயே பலநாள்
மழை மறுக்க
மனம் துடிக்க
மறந்திட்டாயே
உழவும் செய்ய -இன்று
மலடியாய் நான்
அகழ்வாரைத் தாங்கும்
கல்லறை போலானேன்