உழவர்

விளைஞ்ச காட்டக்காட்டி
நெஞ்சு உயர்த்தி நிக்கயில
தரிசுக்காட்டப்போய்
காசுகொடுத்து வாங்குறானே -பாவிப்பய
உழுதவயக்காட்டில்
இறங்க யோசிச்சு
பூடிசு போட்டுருக்கானாம்
பவுசாத்தான் நடந்துவாறான்

களவாணிப்பயபுள்ள
கடைசியில் கவுத்துட்டானே
காஞ்ச காட்டினிலே
கட்டடமா கட்டிவிக்க

காசுபணம் பார்த்ததாலே
கெழுறாத்தான் நிக்குறான்
சண்டாளன் காசக்காட்ட
கதிர்விளைஞ்ச காட்டப்போய்
வித்துட்டானே எம்புருஷன்

எழுதியவர் : charlie kirubakaran (28-Apr-16, 6:32 pm)
பார்வை : 1094

மேலே