அத்தானை முத்தமிட்டு ஆடு
ஒயிற்கும்மி
ஆயிர மாயிர ஆண்டுக்கு முன்னரே
அன்பினில் நாமுமி ணைந்துவிட்டோம்
---அதனாலினி பிரிவேயிலை
---உயர்வோமொரு குறைவேயிலை
அத்தானை முத்தமிட் டாடடியோ !
வாயினி லேமுத்தங் கொட்டிடு கண்மணி
வாஞ்சையோ டேவந்த ணைத்துக்கொள்வாய்
---வளமேதரும் எழில்காதலில்
---வளைவோம்நிதம் வளர்வோமென
வார்த்தைகள் சொல்லியே பாடடியோ !
-விவேக்பாரதி