வளையற் சிந்து - மகிழ்ந்திடுமென் கண்கள்
வளையற் சிந்து
இதழினிலே பூசுகிறாள்
இனிமைத்தமிழ்ச் சாயம் - அதில்
இருப்பதெலாம் நேயம் - எனை
இயக்கிடுமம் மாயம் - அவள்
இயற்றுகவி கேட்கையிலே
இன்புறுமென் காயம் !
மதகளிறை ஒத்ததனம்
மல்லிகைப்பூக் கண்கள் - அதில்
மயங்கிடுவர் பெண்கள் - அவள்
மழலைமொழி விண்கள் - சுடர்
மலர்க்கொடியாய் இடையுடையாள்
மகிழ்ந்திடுமென் கண்கள் !
-விவேக்பாரதி