கடனே சக்தீ
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உலகமெலாம் போற்றுகின்ற தமிழில் மின்னும்
...உயர்வான இலக்கணத்தை அறிய வெண்ணி
கலைத்தாக மடங்காத கார ணத்தால்
...கவித்தாகம் மிகவுற்றுப் பாக்கள் யாக்க
மலையொன்றைச் சுண்டெலிகள் மயிரால் கட்டி
...மறுபக்கம் சாய்த்துவிட முயல்வ தைப்போல்
தலையாட்டி வந்திட்டேன் சக்தி தேவீ !
...தளிரென்னைக் காப்பதுன்றன் கடனே காண்க !
-விவேக்பாரதி