நான்காரைச் சக்கரம் - சித்திரகவி
நான்காரைச் சக்கரம் என்பது சித்திரக் கவிதைகளுள் ஒன்று !
பாடல் : வஞ்சிவிருத்தம்
வேட மாமலை நாடவே
வேட நாயக னாடவே
வேட னாரடி பாடவே
வேட பாவையு மாடவே !
பொருள் :
வேட மாமலை = திருத்தணிகை மலை
வேட நாயகன்/னார் = முருகப் பெருமான்
வேட பாவை = வள்ளி தேவி
கருத்து :
வேடர்கள் வாழ்கின்ற திருத்தணிகை மலையினை நீ நாடிச் சென்றால், அங்கே அழகு மயிலில், வேட நாயகனான முருகப் பெருமானின் எழில் மிகுந்த நாட்டியத்தைக் காணும் பாக்கியம் நேரலாம் ! மேலும் வேடர் குலத்து மருமகனாகிய முருகனின் திருவடிகளை அங்கே கண்டு நீ போற்றிப் பாடினால், வேடர்களில் அழகுப் பாவையான குற வள்ளியும் முருகனுடன் சேர்ந்து ஆடுகின்ற காட்சியினைக் காண நேரலம் !
-விவேக்பாரதி