மலர்ந்த மாணிக்கமாக
அகமும் புறமும் நன்றே திகழ
தூய்மை ஒருங்கே அமைய
மனம் சலனமே இல்லாது இருக்க
ஆத்திரம் மறுக்க பொய் அறுக்க
துப்பரவு என்று தொடங்க நினைக்க
தனது என்ற எண்ணம் ஓங்க
பார்வையிலே அன்பும் பண்பும் வெளிப்பட
மனதில் மகிழ்வு அதிகம் பொங்க.
சுற்றுப்புறம் அழகும் ஒழுங்கும் மேம்பட
மனதிலே அதிர்வு வெகுவாகக் குறைய
அகத்தில் அழகு புறத்த்தில் தெரிய
மலர்ந்த மாணிக்கமாக தெளியுமே
இவ்வுலகு.