நாளும் பொழுதும் ஹைக்கூ -சுஜய் ரகு-

சாலையின் இருமருங்கிலும்
நிழல் ஒழுகும் மரங்கள்
நெடுந்தூரப் பயணம்
--------------------------------------------------
வழியெங்கும் வெயில்
நல்ல விலையில் சிறிது மோர்
தாகம் தான் பெரிது
--------------------------------------------------
மரத்தின் அந்தரங்கம் வரை
வெயிலின் அத்துமீறல் நீள்கிறது
பறவைகளே இல்லை
--------------------------------------------------
சுடு சாலையை ஓணான்
மிக வேகமாகக் கடந்தோடுகிறது
அடிபட்டும் நீரில்லை
--------------------------------------------------
ரசிக்கும்படியான கானல்
அனல் காற்று மிதந்து வருகையில்
வெயிலிலும் அழகு
--------------------------------------------------
இந்த வெயிலைவிடவும்
ஓர் உக்கிரச் சொல் எங்கிருக்கிறது
"வெயில்"தானிருக்கிறது
----------------------------------------------------

எழுதியவர் : சுஜய் ரகு (3-May-16, 5:13 pm)
பார்வை : 119

மேலே