தினம் ஒரு காதல் தாலாட்டு - தனிமை 51 = 94
“தளுக்கு தளுக்கு என சிலுக்கு உடைபோட்டு
மினுக்கும் மினுக்கும் என் சிங்காரி
இனிக்க இனிக்க இன்ப நுனுக்க இடைகாட்டி
உலுக்கி சுளுக்கெடுக்கும் என் ஒய்யாரி
சிவத்த முகத்தினிலே முளைத்த பருக்களிலே
கருத்த மகனெனுக்கு இடமளி அம்மானே
பழுத்த பழமதை சுவைக்க தருவதில்
கஞ்சத் தனம் வேணாம் பெண்மானே..!”
உன்னை கண்ணால பாக்கவில்லை
எனக்கு தன்னால தூக்கமில்லை
என்னை நீ முன்னால வைக்கவில்லை
உனக்கு பின்னால வருத்தம் புள்ளை..!
கண்டாங்கி சேலைதாறேன் கட்டிக்கிட்டு வாடி
கொண்டாங்கி என்னை கொத்திக்கிட்டுப் போடி
முள்ளங்கி பத்தை உன்னோட மெத்தை
முழுசா தாறேன் என்னோட சொத்தை..!
முத்துமணி ரத்தினத்தின் வட்டச்சங்கே – இந்த
பிச்சுமணி தித்திக்கும் பனங் கற்கண்டே
பத்துதரம் எட்டிப்பாக்கும் பால்நிலவே – எந்தன்
முத்துரதம் உன்னைப்பாத்து சொக்கிடுதே
ஒத்தையடி பாதையில் நீ நடந்துப் போகையில்
வித்தை புரியுதடி உன் வெள்ளி கொலுசொலி
அத்தானின் மனக்குளத்தில் நீ நீந்திப் போகையில்
மெத்தை விரிக்குதடி என் உள்ளே உயிரொலி
என்னை ஆதரிக்க பலருண்டு
ஆனால் காதலிக்க யாருமில்லை
கண்ணுக்கழகா உன்னைவிட்டா
எனக்காரும் கிட்டவில்லை
தண்ணீக் கொண்டுப்போகும் பெண்ணே
என்னைக் கண்டு போயேன்டி
காமரசம் நிரப்பி தாறேன்
சுமந்துக்கிட்டு போயேன்டி..!