எந்நேரமும் நீயே
உங்களால் நான்
உங்களோடு நான்
உங்களுக்காக நான்
உயிருக்கு உயிரே
நாதன்
பிராணநாதன்
கண்ணாளன்
~ பிரபாவதி வீரமுத்து
தலைப்பு :
எந்நேரமும் என் மனதெனும் செய்திதாளில் நீ என்றுமே முதல்பக்கமே
செய்தி தாள்களை போல்
பணத்திற்காகவும்
விளம்பரத்திற்காகவும்
முதல் நாள் முதல்பக்கத்திலும்
இரண்டாம் நாள் இரண்டாம்பக்கத்திலும்
மூன்றாம் நாள்
அந்த செய்திக்கு
மூட்டைக்கட்டப்படுதலும்
என் மனமெனும்
செய்திதாளில்
மட்டும் இல்லை
நீயே
எனக்கு
என்றும்
முதன்மையானவன்
முதலானவன்
முடிவானவன்
உயிரானவன்
உடலானவன்
~ பிரபாவதி வீரமுத்து