கவிதை

கவிதை படித்ததும்
பிடித்தது
பிடிக்கவில்லை
என்பதில் கவிதை முடிந்தது

வேறு ஆகச் சிறந்த
படைப்புடன் மல்லுக் கட்டும்
நிர்பந்தம் அதற்கில்லை

ஒருவருக்குப் பிடித்தது
அடுத்தவர்க்குப் பிடிக்கவேண்டும்
என்ற நியதியுமில்லை

அது அதுவாக இருக்கட்டும்
நீங்கள் சிரித்தால் சிரிக்கும்
குழந்தை போல...
---- முரளி

எழுதியவர் : முரளி (6-May-16, 8:15 am)
Tanglish : kavithai
பார்வை : 169

மேலே