குழந்தை தொழிலாளர்கள்
குழந்தை தொழிலாளர்கள்.
கரிகோல் பிடித்த
கைகள் - உணவாக
சமயலறையில் கரிபிடித்து
இருக்கிறது
பட்டாம்பூச்சி பிடித்த
கைகள் - பத்துபாத்திரம்
தேய்த்து கைரேகை
தேய்கிறது
மணல்வீடு கட்டிய
கைகள் - செங்கற்களுடன்
செங்கல் சூளையில்
வேகிறது
பச்சிளம் கைகள்
கொப்பளிக்கிறது
உச்சி வெயில் கூட
சுட்டெரிக்கிறது
படிக்க ஆசை
இருக்கிறது
வறுமை உழைக்க
விரட்டுகிறது
குழந்தை தொழிலாளர்கள் ஒழிக்க - கடுமையான சட்டம்
வருவது எப்பொழுது ?
நாங்கள் மீண்டும் படிக்க
செல்வது எப்பொழுது ?
- ஜீவா நாராயணன்
9600579929