தவமிருந்து காத்திரு,
கனவுகள் சுமந்த
கணைகளில்
கண்ணீர் வழிந்தன,
வாழ்க்கை பயணத்தில்
வறுமையானது
வாசல் வந்தன,
திறமைகளெல்லாம்,
திறம்படவே நெஞ்சில்
தீயாய் நிறைந்தன,
என்றாவது ஒருநாள்
எட்டாக்கனியாய்
கண்கள் காணும்
கனவுகள் நனவாக,
தன்னம்பிக்கையோடு
தவமிரு,
தரணிபோற்ற வாழலாம்
தவமிருந்து காத்திரு,
-கவிபிரவீன்குமார்