குழந்தை ஏன் அழுகிறது

குழந்தை,
குடும்பத்தை மகிழ்ச்சியடைய வைத்த
குதூகலப்பிறப்பு,
அழகிய குழந்தையே - நீ
அன்னை மடியிலே பிறந்தாய்
அழகிய வடிவம் கொண்டாய்,
அகிலத்தில் ஓர் உயிராய் நின்றாய்,
அண்டத்தில் நீ
அடியெடுத்து வைக்கும் போது
அழுகிறாயே ஏன்?
சந்தோஷம் நிறைந்த உலகில்
பிறந்தோமே என்ற
ஆனந்த கண்ணீரா?
சங்கடங்கள் நிறைந்த உலகில்
பிறந்தோமே என்ற
ஊமைக் கண்ணீரோ,
பாவம் அதற்கென்ன தெரியும்!
பச்சபுள்ள அழுவுது
காரணம் நான் சொல்லவா?
சொல்கிறேன்.

திருட்டு பயல்கள் இருக்கும் இடம்
கயவர்கள் பேய்கள் இருக்கும் இடம்
சுயநலத்தோடு மனிதர் உண்டு,
சோம்பேரியாகவும் மக்கள் உண்டு
கொலைகள் பற்பல நடக்கும் இடம்
கொள்ளைகள் பற்பல நிகழும் இடம்
கற்பழிப்பு எங்கேயும் நடக்கும் இடம்
ஊழல் ஆட்சிகள் நடக்கும் இடம்
இங்கு வந்தா நான் பிறந்தேன்?

இப்படியாக - தன்
பிஞ்சி மனதில் வெம்பி அழுததே - என்று
இக்குற்றங்கள் இல்லாமல்
இருக்கிறதோ,
அன்று பிறக்கும் குழந்தை
அழாமல் பிறக்கும்.

-கவிபிரவீன்குமார்

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (6-May-16, 9:35 am)
பார்வை : 141

மேலே