மதுவை மறந்துவிடுங்கள்,

எவ்வளவோ கட்டுரைகளின் மூலம் சமூதாயத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மதுவை மறந்துவிடுங்கள் என்ற கட்டுரையின் மூலம் ஒருசில உள்ளங்களாவது திருந்துவார்கள் என்ற
நம்பிக்கையில் எழுதுகிறேன்.

வேண்டாமே மது :
பொன்போல உன் மேனியை மண்போல ஆக்கும் மதுவா உனக்கு வேண்டும். மண்போல ஆக்குவதுமட்டுமல்லாது உன்னை மண்ணுக்கு உணவாய் அளித்திடும் மதுவா உனக்கு வேண்டும். எத்துனை ஆபத்துக்கள் இருக்கின்றது என்று சொன்னாலும், எத்துனை விளம்பரங்கள் செய்தாலும்,
உன் மனம் மட்டும் மாறாமல் மதுவிடம் மன்றாடுதே ஏன் இந்த அவல நிலை. துன்பங்களை துணிச்சலோடு எதிர்கொள்ளும் மனநிலை உன்னிடமே உள்ளது, இன்பங்களை எளிதில் உன்னிடம் அழைத்து வர ஏணிப்படிகள் உன்னிடமே உள்ளது. எல்லாமே உன்னிடத்திலேயே உள்ளதே அதையெல்லாம் சரியான பாதைதனில் செம்மைபடுத்துங்கள்.

மதுவை மறப்போம் :
எத்துனை குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன, எத்துனை குடும்பங்களை ரயில் தண்டவாளங்களும், ஆறு, கிணறுகளும்,
தனக்கு சொந்தமாக்கி கொள்(ல்)கின்றன,
யோசித்துப்பார் மனிதனே,
மதுவை மறந்து வாழலாமே?

முடிவுரை :
மனமிருந்தால் கண்டிப்பாக மதுவை மறக்க முடியும். மண்ணிலே அதைபுதைக்க முடியும்.
மண்ணிலே புதைத்தது, மகிழ்ச்சி எனும் மரமானது மண்ணில் வளர்வதை நீ உணர்வாய்,
ஆகையால், மதுவை மறப்போம் மகிழ்வோடு வாழ்வோம்.

எப்போதும் சமுதாய முன்னேற்றத்தில்
கவிபிரவீன்குமார்

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (6-May-16, 10:26 am)
சேர்த்தது : பிரவீன்குமார்
பார்வை : 604

மேலே