உன் மன ஆழம்

உனதுள்ளக் கிடக்கையினை சிறிதும்
உணரவில்லை உறுதியாக.

உன் ஒவ்வொரு துடிப்பின் ஆழத்தையும்
கண்டு வியக்கவே செய்கிறேன்.

இதனை இதனால் செய்ய எப்படி
தவிர்த்து நிற்கிறேன்? புரியவில்லை.

உன் ஒவ்வொரு நரம்பின் இசையையும்
அறிந்திருந்தேன் என்று நினைத்திருந்தேன்.

ஆனாலும்
அதனை இசைக்க மறந்திருக்கிறேன்.

உன்னுடனான இத்தனை நிகழ்வு
உன் மறுமுகம் உண்ண உதவியது.

எழுதியவர் : jujuma (20-Jun-11, 5:21 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 348

மேலே