அவளே என் அன்னை
![](https://eluthu.com/images/loading.gif)
ஓர் அங்கத்தில்
இரு உயிர்கள்
ஈர் ஐந்து திங்களாய்
கருவில்
எனை வைத்துக் காத்தாள்.....
வான் பார்த்து
அவள் படுத்து
வலிகள் தீண்டாது
வயிற்றில் எனைச் சுமந்தாள்.....
கால் முளைத்து
நான் உதைக்க
வலித்தாலும்
வதனம் சுழிக்காது
உணர்ந்து அவளும் மகிழ்ந்தாள்.....
நான் மலரும்
கடைத் திங்கள் நாளில்
மறுஜென்மம்
எடுத்து அவளும்
தன் விழிகள் திறந்தாள்.....
கனவிலும்
கரத்தாலும்
தொட்டுத் தடவிப் பார்த்தவள்
கைகளில் எனை அள்ளி
அவள் உறவில்
புது உலகைக் கொடுத்தாள்....
என் பிஞ்சு பாதங்கள்
நெஞ்சு தீண்டும்
அவள் பொன் மேனி
அதை எதிர்ப்பார்த்தே
தன் அகம் நெகிழ்ந்தாள்.....
என் சிரிப்பு தான்
அவளது உலகம்...
அவளது இதயந்தான்
நான் காணும் சுவர்க்கம்...
அவள் அன்புக்கு இல்லை
எல்லை.......