காதலில் புலம்புவதும் ஒரு கவிதை தான்
கன்னத்தின் பணக்குழி மேல் என் கண்கள் பட்டதடி !!
எண்ணத்தை திரும்ப வைத்து ஏதேதோ சொல்லுதடி!!
முத்து பல்வரிசை கண்டு மூளையேனோ குழம்புதடி !!
சொத்து எல்லாம் உனதென்று சொந்தம் கொண்டாடுதடி !!
பால் மணக்கும் உன் முகத்தில் தேனூறும் செவ்விதழ்கள் !!
கால் இரண்டும் நடை பயிலும் கனவில்வரும் அன்னங்கள்!!
வேல் விழிகள் மருளக்கண்டு வியந்து போகும் மானினங்கள்!
நூல் இடையின் அழகு கண்டு நொந்து போகும் ஆணினங்கள் !!