மறு பிறவி எடுத்தும் உனையென் மனைவியாக்கும்
அலைபாயும் கருங்கூந்தலில் மல்லிகை சூட்டி
அழகான இரு கண்ணில் அஞ்சனமும் தீட்டி
கிளி போன்ற உன் மூக்கில் மூக்குத்தி மாட்டி
சிலை போல நீ வந்தாய் என் மனதை வாட்டி !!!
ஒரு கண்ணை ஓரம் காட்டி நீ பார்க்கும் போதும்
சிறு இதழ்கள் அழகு காட்டி புன்னகைக்கும் போதும்
உரு குலைய வைக்கும் என் உள்ளம் கூத்தாடும்
மறு பிறவி எடுத்தும் உனையென் மனைவியாக்கும் !!