உள்ளத்தில் ஒன்றென உணர்
கடவுள் என்பது யாரு ?- அவர்
கருணை உள்ளத்தின் வேரு
உண்டு என்று நம்பு – அந்த
உண்மை தந்திடும் தெம்பு !
அடுத்தவர் வாழ்ந்திட நினை – அது
அறுவடை தந்திடும் தினை
கெடுத்திடச் செய்யும் வினை – பின்
கொடுமைப் படுத்திடும் உனை.
கொடுக்க நீயும் பழகு – அந்த
கொள்கைதான் உனக்கு அழுகு
உடுக்கை இழந்தவன் கையாய் – நீ
உதவிட வேண்டும் மெய்யாய்.
பண்பின் வழியில் செல்லு – உன்
பாதையில் முளைத்திடும் புல்லு
கண்ணில் கருணை கொள்ளு – உனைக்
கண்டு பாடுவார் பள்ளு .
வன்முறை தன்னை பழித்து – அதை
என்றும் வாழ்வில் ஒழித்து
அன்பினைப் பிறரிடம் செலுத்து – உன்
வாழ்வதும் வளரும் செழித்து .
உள்ளத்தில் ஒன்றாய் இருக்கும் – அந்த
உணர்வினால் வாழ்வும் சிறக்கும்
கள்ளத்தின் மனதையும் திறக்கும் – மனம்
கனமின்றி காற்றினில் பறக்கும்.
அன்பே கடவுளாய் ஆகும் – அதை
அறியார் வாழ்வதும் நோகும்
அன்பின்றி கடவுளும் இல்லை – அதை
அறிந்திடின் தொலைந்திடும் தொல்லை.
*********************