தூங்கு நீ தூங்கு
![](https://eluthu.com/images/loading.gif)
என் தலையணையே!
இன்றேனும் நீ தூங்கிவிடு...
என் கண்ணீர் - தினம்
உன் தூக்கத்தை கலைக்கிறது
இன்றேனும் நீ தூங்கிவிடு...
யாருக்கும் தெரியாது
என் மூச்சின் பரிந்துரைகள்!
புரிந்து கொண்ட பின்னும்
பாவம்...
நீ மட்டும் என்ன செய்வாய்
காதல் சினுங்கல்களையும்
கொஞ்சல் மொழிகளையும்
கேட்டுக் கேட்டு ரசித்த உனக்கு
என் விழியின் சுடு கண்ணீரும்
என் மூச்சின் நிறைவேறாத ஏக்கங்களும் - உனக்கு
நிச்சயம் ஏமாற்றம் தான்
இன்றென் நிலையை
நிலவிடம் முறையிடப் போகிறேன்
என் தலையணையே
இன்றேனும் நீ தூங்கிவிடு...
***
- முகம்மது பர்ஸான்