உன்னை அடிக்க நான் யார்

நான் இருக்கும் போதே
உன்னை கீழே விழ விட்டுவிட்டேனே
உன்னை நானே
அடித்துவிட்டேனே
உன்னை பூ
என்கிறேன்
ஏனோ நானே நசுக்கிவிட்டேன்
(நசுக்குகிறேன்)
உன்னை பகல்
என்கிறேன்
ஏனோ நானே இருளாக்கிவிட்டேன்
(இருளாக்குகிறேன்)
உன்னை நிம்மதியாக
வாழ விட வேண்டும்
இல்லை என்றால்
உன்னை விட்டு
நான் போவதை தவிர
வேறு வழியில்லை
~ பிரபாவதி விஜயலட்சுமி வீரமுத்து