நிழல்வெளி

விளைவுகள் அறியாது நீ
என்னிடம் பேசிய
இரகசியங்கள்தான் என்னுடன்
உன்னை பிணைத்திருக்கின்றன
என்று நீ,
உணர்ந்த வேலையில்,
என்னுடன் நீ பேசுவதையும்,சிரிப்பதையும்
குறைத்து கொள்கிறாய்..!!
மனதினை மௌன அரணிற்குள்
சிறையிட்டுவிட்டு புன்னகை பூக்களை
மணித்துளிகளுக்கு மாற்றாக விற்று செல்கிறாய்..
நேரமின்மையை காரணமாக்கிவிட்டு,
இழப்பின் வலிகள் எனக்கு உணராதபடி,
விலகி செல்கிறாய், என்னிடமிருந்து..!!
பிரிந்தபின்,
நீ நீயாக இல்லை என்பதை
யார் உணர்த்துவார் உனக்கு..!?
சாட்சியாக இருக்கும் உன்னை பற்றிய
நினைவுகளை ஆயுளுக்கும் வைத்திருப்பேன்
என் தோழா..!!
மீண்டு வா ..நீயாக..!!
நானாக வேண்டும்..நானும்..!!

எழுதியவர் : கல்கிஷ் (8-May-16, 10:59 am)
பார்வை : 264

மேலே