அவளே அழகு
வட்ட நிலவு : தொட்டு மகிழும்
கட்டு மேனி – பிரம்மன்
கட்டி முடித்து : தீட்டி இரசித்திட்ட
சிட்டு இராணி, - நீ
தட்டிவிடும் விழித் தாலாட்டில்
கொட்டுதடி கவிதை, - அதை
தொட்டு இரசித்து : காதல் ஏற்றிட
சற்றுதடி கூட்டம் உனை நாடி…!
கம்பன் கவி சொன்ன
இலக்கியத் தேனி, - என்
கற்பனை கட்டுவித்துக் கொண்ட
இல்லத்து இராணி, - நீ
விற்பனை புரிகின்ற புன்னகையில்
விளையாடுதடி பிரம்ம சாஸ்திரம், - அதை
ஒப்பனை ஆக்கிக் கொள்ள
ஓடுதடி இளைஞர் கோத்திரம்…!
தூவி விடப்பட்ட தூரிகை
உனது கூந்தல், - பலர்
தாவி இரசித்திடும் பரிவர்த்தன
பல்லாக்கு ஏந்தல். – அதை
கோதி நீ விடுகின்ற அலங்கார
ஜாலம். – எங்கள்
பாதி உயிரைப் பறித்திடும்
போதை கானம்…!
மின்னிடும் உனது செந்நிறக் காதணி
நட்சத்திர வடிப்பு. & அதை
விண்ணிடத்தில் வாங்கியதென்று
ஏமாறுது எனது இதயத் துடிப்பு. -& பெண்ணே
உன்னிடத்தில் வெண்ணிலவு விழியானது எப்போது?
எம்மிடத்தில் பலர் இரவாகி விட்டது என
ஏமாறுவது இப்பொழுது...!
போதுமடி.. உன் பொல்லாப் புன்னகை
வேகுதடி எம் நெஞ்சுக்குள். & கலை
வேதமடி உன்னிடம் கைதானது
எப்போது? & இரதி
மாத வடிவே எம்மிடம் கூறிவிடு
இப்போது.
மதுமடி சொர்க்கத்தில் மயங்கும்
மானிடரையே வாட்டுகிறாயே...!
-நாஞ்சில் இன்பா
9566274503-91