ஆவியாய்
![](https://eluthu.com/images/loading.gif)
நான் அலைகிறேன்
அலை மோதுகிறேன்
பட படத்துக் கொள்கிறேன்
அவனை நம்பிய நான்
இன்று இப்படி காற்றைவிட
மெலிதாய் தரை பாவாமல்
அவன் சொல் கேட்டதால்
நில் என்றான் நின்றேன்
செல் என்றான் சென்றேன்
நிதானி என்றான் நிதானித்தேன்
ஆனால் யாவரும் அவன்
பேச்சைக் கேட்பதில்லை
என் படிமானம் பிடிக்காமல்
அன்று ஒருவன் இடித்தான்
இன்று நான் அங்கேயே
அலை பாய்ந்து கொண்டிருக்கிறேன்
ஐயா! யாரும்
அவன் பேச்சைக்
.......கேட்காதீர்கள்...
அவனை யாரும்
........ மதிக்காதீர்கள்
ஐயோ..!
என்னைப் போல் ஒருவன்
சிவப்பைக் கண்டு நிற்கிறான்
'டமால்..'
நான் ஒருவன் இங்கே
கத்துவது கேட்கவில்லையா...?
வா... நீயும் வந்து
என்னுடன் சுற்று
...... ஆவியாய்..!
----- முரளி