தேர்வெழுத போன மகன்

எம்புள்ள சின்னராசு
பரிச்சை எழுத போனானே
பயப்படாம எழுது ராசான்னு
பக்குவமாய் சொன்னேனே,
பதிலு நல்லா எழுதனுண்னு
பத்துசாமி கும்பிட்டேனே
நல்லாதான் எழுதுவான்னு
நானும் தான் நெனச்சிருந்தேன்
என்னதான் படிச்சானு
எனக்கேதும் தெரியலயே
என் மகன் மனசு கலங்காம
பார்த்து நானும் வளர்த்தேனே
பரிச்சை எழுத போன மகன்
வரவ நோக்கி காத்திருந்தேன்
வீட்டு வழிபாதையிலே
உருவம் ஒன்னு தெரிஞ்சிடிச்சு
என் மகன் வருவான்னு
ஆனந்தமாய் எழுந்தேனே
பிறகுதான் தெரிஞ்சது
என் மகனோட தோழனுன்னு
கண்னத்தில் நீரொழுக
கதறிஅழுது வந்தானே
என்ன சொல்ல வந்தானோ
எனக்கேதும் புரியலயே
அவன் வாயில வந்த
வார்த்தையெல்லாம்
திக்கி திணறி வந்துடுச்சே
உன் மகன் செத்துட்டான்னு
உசுர குத்தி கொண்னானே
என்னப்பா ஆனதுன்னு
என் உள்ளம் பதறி கேட்டுடிச்சே
அம்மா......
பரிச்ச நல்லா எழுதலனு
பால்டாயில குடிச்சுப் புட்டான்னு
பதறி அவன் சொன்னானே
ஐயோ......என்
பச்சப்புள்ள உடம்புலதான்
பால்டாயில் கலந்திடிச்சா?
பச்சப்புள்ள ரத்தத்துல
பால்டாயிலு பதம் பார்த்துடிச்சா
பாவி மனசு பதறிடிச்சே
சுமந்த வயிறு துடிச்சிடிச்சே
எங்கே என் மகனுன்னு
ஏக்கமாய் நான் கேட்டேனே
தூக்கிக்கொண்டு வராங்கண்னு
தேம்பிக்கிட்டே சொன்னானே
ஐயோ.........என்புள்ள வந்துட்டானே
மௌனமா இப்போ கெடக்குறானே
அம்மா மேல கோபமாடா
எதுக்கு நீயும் அமைதியாய் இருக்க
ஒருபவார்தத பேசேண்டா
நான் பெத்த ராசாவே.....
பரிச்சையென்ன பரிச்சையடா
பாழா போன பரிச்சையடா
பால்டாயிலு விழத்துக்காகவா
பத்துமாசம் உன்ன சுமந்தேன்
பக்குவமாய் உன்ன வளர்த்தேன்.
நான் கும்பிட்ட சாமியெல்லாம்
கண்ண மூடி தூங்கிடிச்சா?
என் சாமியே போயிடுச்சே
எந்த சாமிய நான் கும்பிடுவேன்.
மகனே அம்மாவ பாருடா
என் கண்ணீர துடச்சிவிட
இனி யாரிருக்கா என் மகனே..........


(தோல்வியைக் கண்டு துவலாமல் வெற்றியை நோக்கி பயணியிங்கள். எத்தனையோ தாயின் கண்ணீர்கள் சமுதாயத்தில் இந்த தாயாப்போல் துடைக்க
ஆளில்லாமல் இருக்கிறது. மாணவர்களே சிந்தியுங்கள்.)

என்றென்றும் சமுதாயமுன்னேற்றத்தில்
உங்கள் -கவிபிரவீன்குமார்.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (9-May-16, 7:22 am)
பார்வை : 140

மேலே