வாழ்வே மாயம்

பற்றி எரிகிறது
ஓர் ஊரே

கொழுந்து விட்டு
நெருப்பு பிழம்பாகவே,

ஓடுகிறான், பறக்கிறான்
ஒரே வழியிலே

நெருப்பும் வேகமாக
பின் தொடர்கிறது

நூறு , ஆயிரம்,
இலட்சம் என்று

தப்பித்தப போக
தெற்கும் வடக்குமாக

கூரைகள் எரிந்து
சாம்பலாகி விழவே

நெடிதுயர்ந்த மரங்கள்
குபு குபு என்று எரிய

காய்ந்த இலைகள் சருகுகள்
சேர்ந்து எரியவே

எங்கும் தீ எவற்றிலும் தீ
நெருப்பே எத்திக்கிலும்


எண்ணெய் வளமிகுந்த
ஊர் மேக் முர்ரே கோட்டை

தொண்டினால் எண்ணெய்
உற்றெடுக்கமே

செல்வமும் இன்பமும்
நிறைந்த ஊரே

இன்று தீக்காடாக
எறிந்த சாம்பலாகவே

நேற்று ஒரு அழகான ஊராக
இன்று ஒரு புகைந்த காடாக

வாழ்வே மாயம்
வாழ்வோம் நியாயமாக!

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (9-May-16, 10:23 am)
Tanglish : vaazhve maayam
பார்வை : 1004

மேலே