நீயே அழகு

இது ஒரு கவி விரதம்!
இதயத்தின் இராகப் பரவசம்!
இன்றோ நான் அவள் வசம்!
அவளோ என் கைவசம்...!

விளையாடும் தென்றல் அவள் கூந்தல்
வாசனை சுமக்கும் புதுத் தென்றல்
கலை ஆடும் அந்த கரும் பின்னல்
காம ஓடத்தின் அரும் மின்னல்...!

வெள்ளையன் கோட்டையில் நீக்ரோ ஆட்சி. & அவள்
விழியின் நாட்டியமே அதற்கு சாட்சி!
கொள்ளையிட வந்த அந்த அழகின் காட்சி
கோடிக் கவிதையின் ஆரம்ப மாட்சி...!

பிறைநிலா பதித்த வண்ணம்!
பாவை அவளின் சிவப்புக் கன்னம்!
குறை எதுவுமில்லா அக்காமக் கிண்ணம்!
கனவிலும் சுகம் தரும் அற்புத வண்ணம்...!

மலைத்தேன் ஓடிடும் ஆற்றுப் படுகை
மங்கை அவளின் இதழ் படுக்கை
சுளைப் பலாவின் புது உடுக்கை. & அது
சுண்டி இழுக்கும் கமக் கணக்கை...!

மேலாடை ஊர்கோலம் கட்டும் வானம்
மெல்லியாள் கழுத்தே அந்த கானம்!
பூவாடை விளையாடும் மலர்வனம்! & அது
புவிக்குக் கிடைத்த காமத்தின் முதல் பானம்...!

நாஞ்சில் இன்பா

எழுதியவர் : நாஞ்சில் இன்பா (9-May-16, 6:58 pm)
Tanglish : neeye alagu
பார்வை : 178

மேலே