இறைமகள்

மானிட சாதியில் நான் தனிப்பிறவி.
மாவிலைத் தோரணம் காணா சின்னக் குருவி.
மஞ்சணையில் தினமும் ஆடும் தேன் குழவி; - நான்
மாங்கல்யம் காணா செவிட்டுப் பிறவி...

நித்தமும் எனக்கு முதல் இரவுதான்,
நித்திரை என்பது தூரத்து உறவுதான்; - தேன்
நிலா காட்சிகள் தினமும் தான்,
நாளும் வெவ்வேறு மனிதனுடன் தான்...!

பெண்ணின் சுவை எனக்கில்லை,
பொறுமையின் இசை ஆணுக்கில்லை,
பொல்லாத் இரவு எனக்குப் பிள்ளை,
போகும் வரை தூக்கம் எனக்கில்லை...!

ஆடைகள் அவிழ்ப்பு நித்தம் உண்டு,
ஆடவர்கள் சிரிப்பு எப்போதும் உண்டு; - என்
அலங்காரப் பவனி கண்டு
அலங்கோலமாகிறது ஆடவர் மனம் பித்து கொண்டு..

ஆயிரம் பேர்கள் எதிர்ப்பு கொண்டு,
ஆரம்பித்தேன் இக்காட்சி கற்கண்டு,
அனுபவித்த கூட்டம் இன்று
ஆர்பரிக்கிறது நான் ‘இறைமகள்’ என்று...!

நாஞ்சில் இன்பா
9566274503-91

எழுதியவர் : நாஞ்சில் இன்பா (9-May-16, 7:10 pm)
பார்வை : 84

மேலே