காதல்

அடையாளங்கள் எதுவுமின்றி
அன்பில் மட்டுமே வாழும்
ஆனந்த சங்கீதம்...

எவர் கருப்பையோ
என்ற உயிர்கள்,
எந்தத் தொடர்பும் இன்றி
உணர்வுப் பரிமாறும்
விந்தைதான் காதல்...

இது கூத்து அல்ல,
உலகம் வாழும்
உயிர்க்காற்று...!

காதல் ஒரு வளர்பிறை
சலனம் என்றும்
தேய்மானத்தில் தொலைந்து
அன்பில் வளரும்
ஓர் வளர்பிறை...!


மயிலின் சிறகினில்
தீட்டிய ஓவியம் போல,
காதல்
இனிமையானது...
காதலுக்கும்
நிலவுக்கும்
ஏதோ
காலகாலமாய்
உறவு போல...!

வஞ்சிகளும்
வஞ்சிப்பவர்களும்,
கொஞ்சும் பொழுது,
நிலவுதான் சாட்சியாகிறது..
அதனால்தான் என்னவோ
பெண் நிலவு மகளாகவே
இருக்கிறாள்...!

ஆயிரம் மைல் தாண்டி
ஆருடம் சொல்லும்
திறன் காதலுக்கு உண்டு...!

மின்னல் கூட
காதல் விளையாட்டில்
கைப்பிடி விளக்குதான்...!

தென்றல் கூட
காதல் கவிதையில்
பேனா முனைதான்...!

ஒரு பார்வைதான்...
ஆண்மை
பெண்ணிடம்
அடிமை பேசிவிடும்...!

விழிதான் இங்கு
ஆத்திரக்காரி.
அதன் சீண்டல்தான்
இங்கு
இரசக் கலவை...!

சூரியனையும்
கையில் பிடிக்கும் & இந்தக்
காதல் வாழியவே...!

நாஞ்சில் இன்பா

எழுதியவர் : நாஞ்சில் இன்பா (9-May-16, 6:52 pm)
Tanglish : kaadhal
பார்வை : 268

மேலே