நீரின்றி அமையாது உலகு

அடடா! இதுவென்ன விண்நீர் விண்விட்டு மண்ணில் சொட்டுகிறதா ?!!
அல்ல தேவர் செய்த வெண் அமுதம் பொங்கி கொட்டுக்கிறதா ?!!
மண்டலப்பாலாற்றிலிருந்து பிரிந்து பொழியும் துளிகளிதோ ?!!
அல்ல கடல்நனைத்த வெண்மேகம் தன் உடல்கனத்த காரணத்தால்
தன் நீரை வாரி இறைக்கிறதோ ?!!
கடவுள் தூவும் நன்பன்னீர் பூமிக்காற்று பட்டு சிதறித்தெறிக்கிறதோ ?!!
அல்ல தாகங்கொண்ட பூமித்தாய் மேகங்கண்டுஅதன் நீரை
இழுத்துக்குடிக்கிறதோ ???!!
வானை தினம் உழுவதனால்,மேகத்தின் வியர்வை சொட்டுகிறதோ ??!!
வறண்ட வயலின் வறட்சி போக்க,வானின் ஆறு கொட்டுகிறதோ ??!!
காதல் தோல்வியால் கருமேகம் கதறி அழுகிறதோ ?!!
அல்ல வானிலேறிய கடல் நீர் வழுக்கி விழுகிறதோ ?!!
மின்னல்கள் இங்கு எதனாலே - பெண்மேகங்கள் முனுமுனுத்துச்சிரிப்பதாலே....!!
இடி முழக்கங்கள் இங்கு எதனாலே-ஆண்மேகங்களின் மனம் உடைவதாலே....!!

நீரின்றி அமையாது உழவே !!
உழவின்றி அமையாது உலகே !!
உணர்ந்த வள்ளுவர் எழுதினார் அன்று
நீரின்றி அமையாது இப்பூவுலகே என்று !!

மழை -
இதை நினைக்கையில் நல்லெண்ணம்,
பொழிகையில் பேரின்பம்,
வந்தால் வறட்சி ஓடும்,
குடிகளோ கூத்தாடும்.....!!!

நீரின்றி அமையாது உலகே,
நீருக்கு மழையே முதலே,
நீருக்கு பிறகே தாயே
நீயதை உணர்ந்திடுவாயே....!!!!

என் பாட்டனுக்கு மும்மாரி பொழிந்த மழையே
எனக்கு வாராமல் பொய்ப்பதேனோ....??!!!
என் பாட்டிக்கு ஒரு மாரி பெய்த மழையே
எனைக்கண்டு நீ மறைவதேனோ...??!!!

நம் வறட்சியை வெட்டிய மழையை
நாம் வானிலேயே எட்டி உதைக்கிறோமே....!!!
மழை மறுப்புச்சங்கதிகளை
தினம் மண்ணிலே நாம் விதைக்கிறோமே....!!!

நம் வாரிசுகளின் வளமைக்காக,
நல்விருட்சங்கள் கோடி நட்டிடுவோமே....!!
மனங்குளிர்ந்த கருமுகில்களோ,
அருவியென நீரைக்கொட்டிடுமே...!!

மழையாலே ஊரெலாம் பச்சையன செழித்திடுமே...!!!
கலாம் கண்ட பெருங்கனவோ விரைவில் கைகூடிடுமே....!!!!!

எழுதியவர் : தமிழ்தாசன் (10-May-16, 5:59 pm)
பார்வை : 178

மேலே