என் மிதிலையீல்

என் கொலுசுகள்
மௌனம்
பூண்டுவிட்டன .....

பூப்படைந்த போது,
புல்லரித்த
என் இளமை
சுவாசம்
இழந்து விட்டன

என் மிதிலையீல்
ராமனின்
வில் உடைப்பு
அரங்கேறும் என ...
காத்திருந்து
காத்திருந்து.........


விழிநீரால்
ஜனனல் கம்பிகள்
துரு பிடித்ததுதான்
மிச்சம்.......

வரனை
விலை கொடுத்து
வாங்க வழி இன்றி
வெள்ளை அடிக்க பட்ட
சுவராய் என் கூந்தல்........

எமனாவது
வில்லை உடைதது
வயதோகித்தை
முடிப்பானா......?


நாஞ்சில் இன்பா
91-9566274503

எழுதியவர் : நாஞ்சில் இன்பா (10-May-16, 6:03 pm)
பார்வை : 81

மேலே