இராணுவ வீரர்கள் வாழ்க்கை

சூரியன் உதயத்திற்கு
முன் எழுந்து
வெயில் பனி பார்க்காமல்
நாட்டு எல்லையில் நின்று
தன் குடும்பத்தினை
விட்டு சென்று
என் தாயும் முக்கியம்!
தாய் நாடும் முக்கியம்!
மனதில் உறுதி கொண்டு
இருக்கிறார்கள் ..
நம் வீரர்கள்....
போரினால் உயிர் நீங்கலாம்!
உடலின் காயம் ஏற்படலாம்!
எதற்கும் அஞ்சவில்லை!
அவர்கள்...
எல்லாம் நம் குடும்பம்
என எண்ணுகிறார்கள்!
எல்லாம் நமக்காக!
நாம் என்ன நன்றி கடன்
செய்ய போகிறோம்
அவர்களுக்கு..
அவர்கள் இறக்கும் போது
ஐந்து நிமிடங்கள் எழுந்து
மௌன அஞ்சலி செலுத்துவோம்
நாம் அனைவரும்...
அவர்கள் ஆத்மா இறைவனிடம்
சென்றடையும் குறையின்றி!
நம் குடும்பத்தை காக்க
நம் மக்கள் இருக்கிறார்கள்
என்ற நம்பிக்கையில்....
ஜெய்ஹிந்த்...
ஜெய்ஹிந்த்...
ஜெய்ஹிந்த்....

எழுதியவர் : ப.தவச்செல்வன் (10-May-16, 6:54 pm)
பார்வை : 1729

மேலே