தேர்தல்

தேர்தல் அறிவித்ததும்
சூடுபிடிக்கிறது அரசு இயந்திரங்கள் !

ஆடிப்பாடிக்கொண்டிருந்த அத்தனை கொடிகளும்
அவசரமாய் இறக்கப்பட்டு
அம்மணமாய் கொடி கம்பங்கள் !

வேட்பாளரின் விபரங்கள் சுமந்த
பொய் பட்டியலாய்
வேட்பு மனுக்கள் -
ஏற்பதாய் அறிவிக்கிறது தேர்தல் துறை !

குடிக்க காசில்லாதவர்களுக்கு
கொண்டாட்டம் - கோலாகலம் -
மதுவிற்பனையில் சாதனை !

செலவுக்கு காசும்
சிறிய பிரியாணி பொட்டலமும்
போதுமானதாய் ஆகிறது விசுவாசிகளுக்கு !

வீதியெங்கும் பிரச்சாரம்
அதிசயமாய் உலாவருகிறார்கள்
அரசியல் மாண்புமிகுக்கள் !

வேடிக்கையாய் விநோதமாய்
பொழுதுபோக்காய் கழிகிறது
மக்களுக்கு தேர்தல் நேரம் !

அல்லிவீசப்படுகிறது அரசியல் தந்திரம் -
இலவசம் விளம்பரம் -
மாட்டிக்கொள்ள மக்கள் தயார் !

ஓட்டுக்கு பணம் ,ஒன்றும் புரியா மனம்
மீண்டும் மீண்டும் பொறிக்குள் மாட்டுது
மக்கள் மனம் !

இதில் ஜெயிப்பது யார் ?
மக்களா ?
இல்லை வேட்பாளர்களா ?

எழுதியவர் : வினாயகமுருகன் (11-May-16, 10:29 am)
பார்வை : 730

மேலே