நம்பு நம்பாதே

நாயை நம்பு
பூனையை நம்பாதே

சேனையை நம்பு
யானையை நம்பாதே

ஒரு கூற்றை நம்பு
ஆற்றை நம்பாதே

படும் பாட்டை நம்பு
பாடும் பாட்டை நம்பாதே

மதியை நம்பு
விதியை நம்பாதே

பாதையை நம்பு
போதையை நம்பாதே

குணத்தை நம்பு
பணத்தை நம்பாதே

பெண்ணை நம்பு
அவள் கண்ணை நம்பாதே

கல்லை நம்பு
கடவுளை நம்பாதே

படிப்பை நம்பு
நடிப்பை நம்பாதே

தூற்றலை நம்பு
போற்றலை நம்பாதே

உடலை நம்பு
உயிரை நம்பாதே!

எழுதியவர் : ஜெயபாலன் (12-May-16, 9:44 am)
Tanglish : nambu nampaathae
பார்வை : 250

மேலே