மாதக் கடைசி
கை கொடுக்கின்றன
கரியும் உப்பும்
தன் நிறம் மாறுகின்றன
உடைகள்
அடகு கடைக்கு
இடம் மாறுகின்றன
பாத்திரங்கள்
பல் இளிக்கின்றன
மணி பர்ஸ்
இவை அனைத்தையும் கடந்து
வாழ்வை கடத்துகின்றனர்
நடுத்தர கூலிகள் !