அமைதி
அடைமழையிலும்
பெரும்புயலிலும்
உங்களுக்கு கிடைத்திட்டால்...
வறுமையிலும்
ஏழமையிலும்
உங்களுக்கு கிடைத்திட்டால்...
கொடிய வெயிலிலும்
நடுங்கும் குளிரிலும்
உங்களுக்கு கிடைத்திட்டால்...
ஏமாற்றத்திலும்
அவமானத்திலும்
உங்களுக்கு கிடைத்திட்டால்...
வன்முறைக்கிடையிலும்
தீவிரவாத வன்மத்திலும்
உங்களுக்கு கிடைத்திட்டால்...
அசுத்தக் காற்றிலும்
அழுக்குத் தண்ணீரிலும்
உங்களுக்கு கிடைத்திட்டால்...
இந்த அமைதியை நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள்...
நீங்கள் ஒரு வாழும் தெய்வம்...
எங்களுக்கு தவணைமுறையாலாவது
அமைதியை கடனாகத் தரக்கூடாதா?